August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை
தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் கொரோனா சிகிச்சை சிறப்பபஎஎ பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை (மே 9) முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் 15-ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவிடும். ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தற்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இதையடுத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தற்போது 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love