January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்

????????????????????????????????????

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

புது தில்லி, டிச.22

இலங்கை சிறையில் உள்ள 69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர் மற்றும் அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் விளக்கிக் கூறினார்.

தமிழக மீனவர்கள் கொரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், அது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையும் வெளியுறவு அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். மனிதர்கள் மீது கிருமிநாசினியை பீய்ச்சி அடிப்பது உலக சுகாதார நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் விளக்கிக் கூறிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இத்தகைய அவலமான சூழலில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கவலை தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும், விரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார். இதற்காக வெளியுறவு அமைச்சருக்கு, அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love