January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ரயில்வே மூலம் மாருதி அனுப்பியுள்ளது

புது தில்லி, ஏப்.21

கடந்த, 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட, 7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் இந்திய ரயில்வே மூலம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மாருதி சுசூகி நிறுவனம், கடந்த நிதியாண்டில் மட்டும் 1.8 லட்சம் வாகனங்களை ரயில்வே மூலம் அனுப்பி இருக்கிறது. கடந்த 2016- 17ம் ஆண்டில், அதிகபட்சமாக, 88 ஆயிரம் வாகனங்களை அனுப்பியிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் தான் அதிகளவில் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ரயில்கள் வாயிலாக வாகனங்களை அனுப்புவதன் மூலம், 3,200 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு ஈடுசெய்யப்பட்டுள்ளது என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில், ரயில் வாயிலாக அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில், 13 சதம் ஆகும். இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுக்கவா தெரிவித்துள்ளதாவது:

உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை, ரயில்வே வாயிலாக கொண்டு செல்வது, பல நன்மைகளை வழங்குவதாக இருக்கிறது. இது ஒரு சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்து முறையாகும். இது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது. இதன் காரணமாக, நாங்கள் ரயில்வே வழியான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love