January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் பல்சர் பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது

புதிய எண்ட்ரி லெவல் பல்சர் என்எஸ்125 என்ற பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

பல்சர் என்எஸ் சீரிஸ் பைக்குகளில் 200சிசி மற்றும் 160சிசி மாடல்கள் விற்பனையில் உள்ளன. போட்டி பிராண்டுகளைக் காட்டிலும் இந்த மாடல்களின் விலை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பல்சர் என்எஸ் பைக்கின் குறைந்த விலை கொண்ட மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

புதிய மாடலில் 2 வால்வுகள் கொண்ட 124.4சிசி ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 12 எச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பைக்கானது பெரிமீட்டர் ஃப்ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. மேலும், முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன.

இந்த பைக் 144 கிலோ எடை கொண்டது. பல்சர் என்எஸ் 160 பைக்கைக் காட்டிலும் இந்த மாடல் 7 கிலோ குறைவான எடை கொண்டதாக இருக்கிறது. அத்துடன், தரையிலிருந்து 179 மிமீ அளவில் இருக்கை உயரத்தையும், 805 மிமீ வீல் பேஸ் நீளத்தையும் கொண்டுள்ளது.

இந்தப் பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் தரப்பட்டுள்ளது. பீச் புளூ, ஃபியரி ஆரஞ்ச், பர்ன்ட் ரெட் மற்றும் ப்யூடெர் கிரே ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உடல் பகுதியில் ஹை கிளாஸ் மெட்டாலிக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் பித்தளை வண்ணத்தில் காணப்படுகிறது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 பைக் ஆரம்ப விலை ரூ.93,690 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Spread the love