கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாய சம்மந்தப்பட்ட இடுபொருட்கள் வாங்கும் போதெல்லாம் வரி கட்டி தான் வாங்கிறோம். இப்படிப்பட்ட இந்த வரி முறையை பற்றி பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள, சில தகவல்கள நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.
நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்து நேரடி, மறைமுக வரி வசூலித்து வரப்பட்டது.
நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக் கூடிய வரி. எடுத்துகாட்டாக, தொழில் வரி, சொத்து வரி, வருமான வரி உள்ளிட்டவை.
மறைமுக வரி- என்பது குடிமக்கள் நேரிடையாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் மக்கள் வாங்கும் பொருட்களுக்கு, பெரும் சேவைகளுக்கு வர்த்தகர்களால் மக்களிடம் வரி வசூல் செய்ய பட்டு அதை மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்துவததாகும். எடுத்துக்காட்டாக கலால் வரி, வாட் வரி, விற்பனை வரி.
இந்த மாதிரியான இரண்டு வரி விதிப்பு முறைகளை தடுத்து “ஓரே நாடு ஓரே வரி” என்ற அடிப்படையிலான சரக்கு மற்றும் சேவை வரி (GOODS AND SERVICES TAX) GST கடந்த 2017 ஜீலை 1ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு மணியடித்து அமுல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு முறை முதன்முதலாக 1954ஆம் ஆண்டிலேயே பிரான்சு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று 140 நாடுகளில் செயல்பாட்டில் உள்ள வரியாகும்.
GST வரி மூன்று வகைகளில் வசூல் செய்யப்படுகிறது.
1) ஓன்றிய அரசின் ஜி.எஸ்.டி (C.G.S.T)
2) மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களான வரி ( S.G.S.T)
3) ஒருங்கிணைந்த வரி (IGST)
பொருட்கள் மற்றும் சேவைக்கான தன்மைகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக 5%, 12%, 18%, 28% என்ற சதவீத அடிப்படையில் வரி வசூலிக்கபடுகிறது. பொதுவாக ” டாக்ஸ் ” என்ற சொல் லத்தீன் சொல்லான “டாக்ஸோ” என்பதிலிருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்க தகவல். GST வரி அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகள் இந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான முறையில் வரி வசூலித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஓரே வரி நாடு முழுவதும் இருப்பதால் சரக்குகளை விற்பனை செய்யவதில் இடர்பாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசாங்கத்துடன் ஓத்துழைத்து நாமும் வேளாண்மையில் முன்னேறி அதிக மகசூல் எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில், உறுதுணையாக இருப்போம்.