திருச்சி, மார்ச் 16
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் 11 மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பயிற்சியின் கீழ் துறையூர் என்னும் கிராமத்தில் வேளாண் மாணவிகள், விவசாயிகளுக்கு TNAU தேங்காய் டானிக் பற்றி விரிவாக விளக்கினார்கள். இது தென்னை மர வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. தென்னை மர இலைகளின் பச்சையம் மற்றும் ஒளிச்சேர்க்கை திறனை அதிகரிக்க முடியும். பொத்தான் உதிர்வதை குறைக்கிறது. பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வழங்குகிறது. ஆறு மாத இடைவெளியில் ஆண்டுக்கு 200 மிலி /மரம் டானிக்கை வேர் ஊட்டவும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
Spread the love